Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

09th May 2023 22:05:28 Hours

களனி ரஜமஹா விஹாரை அன்னதானம் தளபதியினால் ஆரம்பிப்பு

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ, இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே, இராணுவ நிறைவேற்றுப் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் எம்ஜிடபிள்யூடபிள்யூடபிள்யூடபிள்யூஎம்சிபி விக்ரமசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சி மற்றும் சில அதிகாரிகள் வெசாக் தினத்தன்று (மே 5) களனி ராஜ மகா விகாரையில் பிரமாண்ட அன்னதான நிகழ்வை ஆரம்பித்து வைத்தனர்.

லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் முதலில் களனி ரஜமஹா விகாரையின் பிரதமகுருவான வண.பேராசிரியர் கொள்ளுப்பிட்டி மஹிந்த சங்கரக்கித நாயக்க தேரரிடம் ஆசிர்வாதம் பெற்றார்.

புனித சன்னதி மற்றும் இதர புனித ஸ்தலங்களுக்கு காணிக்கை செலுத்திய பின்னர், ஆலயத்தின் பஸ்நாயக்க நிலமே திரு தம்மிக்க ஆட்டிகல உள்ளிட்ட பிக்குகள் மற்றும் அமைப்பாளர்களால் அங்கு கூடியிருந்த பக்தர்களுக்கு உணவு வழங்கலை ஆரம்பித்து வைக்க அழைக்கப்பட்டார். மேலும் மத அனுஷ்டானங்களுக்கான வெசாக் தினத்தில் திருமதி ஜானகி லியனகே அவர்கள் இராணுவத் தளபதியுடன் இணைந்து கொண்டார்.

இராணுவத் தளபதி மற்றும் திருமதி ஜானகி லியனகே ஆகியோர் அந்த பக்தர்களுடன் சில நிமிடங்களைச் செலவிட்டதோடு, அப்பகுதியில் வெசாக் ஏற்பாடுகள் மற்றும் அவர்களின் நலன்கள் குறித்தும் கேட்டறிந்தனர்.