Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

04th March 2023 20:20:57 Hours

கல்கிசையில் நடைபெற்ற 84 வது நீச்சல் போட்டியில் இராணுவ நீச்சல் வீரர்கள் வெற்றி

இலங்கை நீர் விளையாட்டு ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட 84 வது 2-மைல் கடல் நீச்சல் சம்பியன்ஷிப்பில் 80க்கும் மேற்பட்ட நீச்சல் கழகங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் 800க்கும் மேற்பட்ட நீச்சல் வீரர்களின் பங்குபற்றுதலுடன் கல்கிசை கடற்கரையில் மார்ச் 3-4 திகதிகளில் இடம்பெற்றது.

இராணுவ நீச்சல் வீரர்கள் தொடர்ந்து 6 வது முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றனர். அவர்கள் ஆண்கள் சாம்பியன்ஷிப் கோப்பை, பாதுகாப்பு சேவைகள் கோப்பை, அதிக மொத்த புள்ளிகள் கோப்பை மற்றும் சிறந்த தனிநபர் நீச்சல் கோப்பை ஆகியவற்றைப் வென்றனர்.

இலங்கை இராணுவ நீச்சல் வீரர்கள் 86 புள்ளிகளைப் பெற்று சம்பியன் பட்டத்தை சுவீகரித்ததோடு புனித ஜோசப் கல்லூரி அணி 67 புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடத்தைப் பிடித்தது. அம்பலாங்கொட தேவானந்தா கல்லூரி நீச்சல் வீரர்கள் 20 புள்ளிகளைப் பெற்று மூன்றாம் இடத்தைப் பெற்றனர்.

இலங்கை இராணுவ நீர் விளையாட்டுக் குழுவின் தலைவரும் இலங்கை இராணுவத்தின் பொதுப்பணி பணிப்பாளர் நாயகமுமான மேஜர் ஜெனரல் நிஷாந்த மானகே அவர்களின் வழிகாட்டலின் கீழ் இராணுவத்தைச் சேர்ந்த 62 நீச்சல் வீரர்கள் போட்டியில் கலந்து கொண்டனர்.

போட்டியின் தனிப்பட்ட திறன்கள் பின்வருமாறு:

ஆண்கள் அணி

முதலாமிடம் - லான்ஸ் கோப்ரல் பி டி ஷெஹான் - 2 வது (தொ) இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி

06 ம் இடம் - லான்ஸ் கோப்ரல் டிஎச்கேஎஸ்ஐ டி சில்வா - 6 வது இலங்கை சிங்க படையணி

08 ம் இடம் - லான்ஸ் கோப்ரல் டபிள்யூபிஎம்எல் அபேரத்ன - - 2 வது (தொ) இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி

12 ம் இடம் - லான்ஸ் கோப்ரல் ஆர்பிடி நிரோஷன - 1 வது இராணுவ பொலிஸ் படையணி

14 ம் இடம் - சிப்பாய் ஐ எம் அபேரத்னா - 2 வது (தொ) இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி

12 ம் இடம் - லான்ஸ் கோப்ரல் ஆர்எம்என் ரணதுங்க - 15 வது (தொ) விஜயபாகு காலாட் படையணி

19 ம் இடம் - சார்ஜென்ட் டபிள்யூ விமல் குமார - 3 வது இலங்கை இராணுவ சேவை படையணி

22 ம் இடம் - லான்ஸ் கோப்ரல் எச்ஏஐஎம் ஹெட்டியாராச்சி – 23 வது இலங்கை சிங்க படையணி

23 ம் இடம் – பணிநிலை சார்ஜென்ட் டிஎம்சிஎல் ஜயசிங்க – 3 வது இலங்கை இராணுவ பொலிஸ் படையணி

24 ம் இடம் - கோப்ரல் ஜேஎன் அசாஜி - 3 வது இலங்கை இராணுவ பொலிஸ் படையணி

25 ம் இடம் - லான்ஸ் கோப்ரல் எச்எல்எச்கே குமார - 15 வது (தொ) பொறியியல் சேவை படையணி

பெண்கள் அணி

25 ம் இடம் - கோப்ரல் பிஜிசி ஜினதாரி - 1 வது இலங்கை மகளிர் படையணி