Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

31st January 2024 20:23:18 Hours

கற்பித்தல் முறைமை பாடநெறி - எண் 71 அம்பாறையில் நிறைவில்

கற்பித்தல் முறைமை பாடநெறி -எண் 71, அம்பாறை போர்ப் பயிற்சிப் பாடசாலையில் ஜனவரி 30 ம் திகதியன்று இராணுவத்தின் வெவ்வேறு படைப்பிரிவுகளைப் பிரதிநிதித்துவப்படுத்திய 123 பங்கேற்பாளர்களுடன் நிறைவு பெற்றது.

பரிசளிப்பு நிகழ்வில் பிரதம அதிதியாக அம்பாறை போர்ப் பயிற்சிப் பாடசாலையின் தளபதி பிரிகேடியர் டிஆர்என் ஹெட்டியாராச்சி ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பூ அவர்கள் கலந்துகொண்டார். பாடநெறியின் சிறந்த மாணவியாக 7 வது இலங்கை மகளிர் படையணியை சேர்ந்த சிப்பாய் யுஎச்எஸ் லியனகே சான்றிதழ் பெற்றார்.

இந்நிகழ்வில் அம்பாறை போர்ப் பயிற்சிப் பாடசாலையின் கட்டளை அதிகாரி, சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் பயிற்றுனர்களும் கலந்து கொண்டனர்.