Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

08th August 2023 23:27:15 Hours

கந்தானை தொழிற்சாலை தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு படையினர் உதவி

கந்தானை க்லோபல் கேயார் தயாரிப்பு நிறுவனத்தில் (பிரைவேட் லிமிடெட்) திடீரென ஏற்பட்ட தீயைக் கட்டுப்படுத்த மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 8 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணி மற்றும் 2 வது இராணுவ சேவைப் படையணியின் படையினர்கள் செவ்வாய் (8 ஓகஸ்ட்) காலை முழு ஆதரவையும் வழங்கினர்.

70 இராணுவ வீரர்கள், இலங்கை கடற்படை வீரர்கள் மற்றும் தீயணைப்பு பிரிவின் அதிகாரிகள் அடங்கிய குழு இணைந்து கட்டிட வளாகத்திற்கு அதிகமான சேதத்தை ஏற்படுத்திய தீயை கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்தனர்.

8 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணி, 2 வது இராணுவ சேவைப் படையணியின் கட்டளை அதிகாரிகள் மற்றும் 141 வது காலாட் பிரிகேட் தளபதி ஆகியோர் அந்த இடத்திற்கு நேரடியாக சென்று தேவையான வழிகாட்டுதல்களை வழங்கினர்.

அதே நேரத்தில் தீயினால் ஏற்பட்ட புகை காரணமாக பாதிக்கப்பட்ட புனித செபஸ்டியன் கல்லூரி மாணவர்களை படையினர், அருகிலுள்ள மருத்துவமனைக்கு சேர்க்க உதவினர், பிற்பகல் தொழிற்சாலையில் தீ முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.