Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

26th June 2024 21:51:08 Hours

கண்டி சுவர்ணமாலி பெண்கள் கல்லூரியில் மாணவ தலைவர்கள் பதவியேற்பு

கண்டி சுவர்ணமாலி பெண்கள் கல்லூரியில் மாணவ தலைவர்கள் பதவியேற்கும் விழா 25 ஜூன் 2024 அன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் 11 வது காலாட் படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் ஆர்எம்எம் ரணசிங்க டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

வருகை தந்த பிரதம அதிதியை பாடசாலை மாணவர்கள் மற்றும் பணியாளர்கள் வரவேற்றனர். விழாவில் அவர் ஆற்றிய உரையில் தலைமைத்துவத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். தனது உரையைத் தொடர்ந்து, பிரதம அதிதி புதிதாக நியமிக்கப்பட்ட பாடசாலையின் மாணவ தலைவர்களுக்கு சின்னங்களை அணிவித்தார். மகா சங்க உறுப்பினர்கள் மற்றும் பாடசாலையின் பணியாளர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.