20th June 2023 20:35:37 Hours
இரக்கம் மற்றும் வாழ்வாதாரத்திற்கான ஆதரவின் இதயத்தைத் தூண்டும் ஒரு நிகழ்வாக கருதப்படக்கூடிய வகையில், யாழ்ப்பாணக் குடாநாட்டில் உள்ள கடைக்காடு என்ற இடத்தில் மற்றொரு குறைந்த வருமானம் கொண்ட குடும்பத்திற்காக 769 வது புதிய வீட்டை யாழ்ப்பாண பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் படையினர் நிறைவு செய்து ஞாயிற்றுக்கிழமை (18) பயனாளிக்கு வழங்கி வைத்தனர்.
யாழ்ப்பாணப் பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எஸ்ஆர்கே ஹெட்டியாராச்சி ஆர்டப்ளியுபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யுஎஸ்பீ என்டியு பீஎஸ்சி அவர்கள் நிகழ்வின் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு, பதாகையை திரைநீக்கம் செய்து, சாவியின் பிரதியை பயனாளியான திரு S. ஜெஸ்லி ஜெயராஜ் அவர்களிடம் கையளித்தார். இல. ஜே/429, வத்திராயன், கடைக்காடு, விலாசத்தில் கை குழந்தையுடன் வறுமை காரணமாக நான்கு குடும்பங்கள் ஒரே வீட்டில் வாழ்ந்தமை குறிப்பிடத்தக்கது.
55 வது காலாட் படைபிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எம்கேயுபீ குணரத்ன ஆர்எஸ்பீ என்டியு பீஎஸ்சி ஐஜி அவர்களின் மேற்பார்வையின் கீழ் தகுதியான வீடு கட்டப்பட்டது, அவர் தனது தனிப்பட்ட தொடர்புகள் மற்றும் நலன் விரும்பிகள் மூலம் திட்டத்திற்கான நிதி உதவியைப் பெறுவதில் முக்கிய பங்கு வகித்தார். தகுதியான குடும்பத்தின் மனைவி கர்ப்பமாக இருந்தபோது உதவிக்காக படைப்பிரிவு தளபதியை நாடியதன் பயனாக இத்திட்டம் முன்னெடுக்க்பட்டது. திறப்பு விழாவின் போது உலர் உணவு பொதிகளும் விநியோகிக்கப்பட்டது.
12 (V) விஜயபாகு காலாட் படையணியின் படையினர் 553 ஆவது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் ஜிஎஸ்கே பெரேரா ஆர்எஸ்பீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் நிர்மாணப் பணிகளுக்கு மிகவும் தேவையான மனிதவளம் மற்றும் தொழில்நுட்ப திறன்களை வழங்கினர்.
நிகழ்வின் போது, உலர் உணவுப் பொதிகள் மற்றும் அத்தியாவசிய வீட்டுப் பொருட்களும் அதே சந்தர்ப்பத்தில் யாழ்ப்பாண பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியினால் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வின் போது கிளிநொச்சி பிரிவு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் திரு எஸ்எஸ்பீ அஜித் குணரத்ன, யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் பிரிகேடியர் நிர்வாகம் மற்றும் வழங்கல் பிரிகேட் தளபதிகள், சிரேஷ்ட அதிகாரிகள், அரச அதிகாரிகள், பயனாளிகள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.