Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

21st October 2019 16:13:58 Hours

கடற்படையின்‘கோல் டயலொக்’சர்வதேச மாநாடு ஆரம்பம்

வருடாந்தம் இடம்பெறும் இலங்கை கடற்படையின் ‘கோல் டயலொக்’ -2019 இரண்டு நாள் கடல்சார் சர்வதேச மாநாடு இன்று காலை(21) கோல்பேஸ் ஹொட்டலில், நாடுகடந்த கடல்சார் அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்கான சூழ்நிலையை உறுவாக்குதல் மற்றும் ஒரு தசாப்தத்தின் மதிப்பாய்வு எனும் தொனிப்பொருளின் கீழ் வெளிநாட்டு மற்றும் உள்ளுர் நிபுணர்களின் பங்களிப்புடன் இடம்பெற்றது.

இந்த வருடாந்த பிராந்திய மற்றும் சர்வதேச கடற்படை நிபுணர்களின் கடல்சார் பாதுகாப்பு மற்றும் கடல் வழி சம்பந்தமான பரிமாறல் ஒன்றுகூடலானது, பாதுகாப்பு அமைச்சு மற்றும் இலங்கை கடற்படையினால் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டது.

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ ருவான் விஜயவர்தன, அட்மிரல் வசந்த கரநாகொட, ஜனாதிபதி செயலாளர் திரு உதய செனவிரத்ன, பாதுகாப்பு செயலாளர் ஜெனரல்(ஓய்வு) சாந்த கோட்டேகொட, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் திரு ரவிநாத் ஆரியசிங்க, பாதுகாப்பு பதவிநிலை பிரதாணி அட்மிரல் ரவிந்திர சி விஜேயகுணரத்ன மற்றும் முப்படைத் தளபதிகள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

கோல்பேஸ் ஹொட்டலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கலந்து கொண்ட வெளிநாட்டு சிரேஷ்ட கடற்படை அதிகாரிகளுக்கு இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா வாழ்த்துக்களை தெரிவித்ததோடு, அவர்களில் சிலர் லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து தங்களது கருத்துக்களையும் பரிமாற்றிக்கொண்டனர்.

மேலும் சம்பிரதாய முறைப்படி மங்களகர விளக்கேற்றலுடன் இந்நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கவிடயமாகும். Authentic Nike Sneakers | Air Jordan