Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

27th February 2023 20:20:38 Hours

கடற்கரை கரப்பந்தாட்டப் போட்டியில் இராணுவப் பணிநிலை சார்ஜெனுக்கு வெள்ளிப் பதக்கம்

நீர்கொழும்பு கரையோரக் கடற்கரையில் நடைபெற்ற சி.ஐ.எஸ்.எம் போட்டியின் நிறைவு விழாவின் போது இலங்கை இராணுவத்தின் 10வது இலங்கை சமிக்ஞைப் படையணியைச் சேர்ந்த பணிநிலை சார்ஜென்ட் கே.ஏ.கே.ஐ.டி ஜயதிலக்க அவர்களுக்கு பெப்ரவரி 17 ஆம் திகதி நீர்கொழும்பில் விசேட பதக்கம் வழங்கப்பட்டது.

4வது உலக இராணுவ கடற்கரை கரப்பந்து சி.ஐ.எஸ்.எம் சாம்பியன்ஷிப் 2023, பிரேசில் (2017), சீனா (2018) மற்றும் 2022- 2023 இல் இலங்கையில் நடைபெற்ற பல போட்டிகளில் அவர் கடற்கரை கரப்பந்து விளையாட்டில் சிறந்த வீரராக விளங்கினார்.

இலங்கை கடற்கரை கரப்பந்து சம்மேளனம் அவரை 2023 ஆம் ஆண்டிற்கான தேசிய பயிற்சியாளராக பெயரிடுவதற்கு கடற்கரை கரப்பந்து சி.ஐ.எஸ்.எம் ல் வௌ்ளி பதக்கத்தை வென்ற முதல் இராணுவ விளையாட்டு வீரரானார்.

சி.ஐ.எஸ்.எம் கடற்கரை கரப்பந்து போட்டியின் நிறைவு விழாவின் போது, நீர்கொழும்பில் கூடியிருந்த பெருந்திரளான மக்கள் முன்னிலையில் சி.ஐ.எஸ்.எம் இன் சர்வதேச பிரதிநிதியால் சிறப்பு சான்றிதழுடன் அவருக்கு சிறப்பு பதக்கம் வழங்கப்பட்டது.

இராணுவ கரப்பந்து குழுவின் தலைவராக மேஜர் ஜெனரல் மஞ்சுள காரியவசம் கடமையாற்றுகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.