Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

15th January 2021 14:57:20 Hours

கடந்த 24 மணி நேரத்தில் மத்திய கிழக்கில் இருந்து அதிகமான இலங்கையர்கள் வருகை

இலங்கை இராணுவம், சுகாதார பிரிவு மற்றும் ஏனைய பங்குதாரர்களுடன் இணைந்து, கடந்த 24 மணிநேரத்தில் (15) வெள்ளிக்கிழமை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தடைந்த 645 மத்திய கிழக்கில் பணிபுரிந்த அதிகமான பணிப்பெண்களை கொண்ட இலங்கையர்கள் முப்படையினரல் நிருவகிக்கப்படும் தனிமை படுத்தும் நிலையங்களுக்கு உடனடியாக அனுப்பிவைக்கப்பட்டனர்.

அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் எண்ணக்கருவிற்கமைய வெளிவிவகார அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு மற்றும் சுகாதார அமைச்சு மற்றும் கொவிட் -19 பரவலை தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையம் ஆகியவற்றின் அறிவுறுத்தலின் பேரில் மத்திய கிழக்கில் நிர்க்கதியில் உள்ளாகியிருக்கும் இலங்கையர்களை இலங்கைக்கு திருப்பி அழைத்துவர முடிவு செய்ததன் பிரகாரம் அவர்கள் அழைத்துவரப்பட்டனர் என்பது குறிப்பிட தக்க விடயமாகும்.

அதற்கமைய, கட்டார், சவுதி அரேபியா, கொரியா, ஓமான், மாலத்தீவு மற்றும் துபாய் போன்ற நாடுகளில் இருந்து 645 இலங்கையர்கள் இலங்கைக்கு வந்தனர். அவர்களில் 288 பேர் ஓமானில் இருந்தும் மற்றும் 203 பேர் விசா இல்லாமல் மற்றும் தொழலை இழந்த நிலைபோன்ற பல்வேறு காரணங்களுக்காக தடுப்பு மையங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களாவர். மேலும், மத்திய கிழக்கைச் சேர்ந்த 268 இலங்கை பணியாளர்கள் கடந்த 13 ஆம் திகதி திருப்பி அனுப்பப்பட்டனர். நாட்டிற்கு வருகை தந்த அனைவரும் முப்படையினரால் நிர்வகிக்கப்படும் தனிமைபடுத்தும் மையங்களுக்கு தனிமைபடுத்தலுக்காக அனுப்பப்பட்டுள்ளனர்.

கொவிட்-19, பரவலை தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும் பாதுகாப்புப் பதவி நிலை பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், இலங்கைக்கு வருகை தந்ந அனைவரையும் தனிமைப்படுத்தல் மையத்திற்கு கொண்டு செல்ல விரைவாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. விமான நிலையத்தில் அவர்களின் கருத்துக்கள் பின்வருமாறு: latest Running Sneakers | Womens Shoes Footwear & Shoes Online