Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

31st October 2024 18:18:04 Hours

கஜபா படையணி விளையாட்டு சாதனையாளர்களுக்கான பாராட்டு விழா

கஜபா படையணி விளையாட்டு வீரர்களுக்கான பாராட்டு விழா 27 ஒக்டோபர் 2024 அன்று கஜபா படையணி தலைமையகத்தில் விளையாட்டு வீரர்கள் மற்றும் அவர்களின் பயிற்சியாளர்களை கௌரவிக்கும் வகையில் நடாத்தப்பட்டது.

இந்த நிகழ்வில் யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதியும் கஜபா படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் எம்ஜிடபிள்யூடபிள்யூடபிள்யூஎம்சிபி விக்ரமசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் கலந்துகொண்டார். விளையாட்டு வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு, அவர்களின் அர்ப்பணிப்பை பாராட்டி படையணியின் படைத் தளபதி நினைவு பரிசுகளை வழங்கினார்.

விழாவில் கலாசார நடன நிகழ்ச்சிகள் மற்றும் ஒவ்வொரு பிரிவும் குழுப்படங்கள் எடுத்துக் கொண்டதுடன் நிகழ்ச்சிகள் நிறைவடைந்தன. இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.