Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

கஜபா படையணி அவர்களின் மறைந்த போர் வீரர் மேஜர் ஜெனரல் விஜய விமலரத்னவின் 25வது ஆண்டு நினைவு தின அனுஸ்டிப்பு.

இலங்கை இராணுவத்தின் கஜபா படையணி உருவாக்கிய தலைசிறந்த போர் வீரர்களில் ஒருவரான மறைந்த மேஜர் ஜெனரல் விஜய விமலரத்னவின் 25வது நினைவு தினம் ஞாயிற்றுக்கிழமை (6) அனுராதபுரம் சாலியபுர கஜபா படையணி தலைமையகத்தில் நடைபெற்றது.

படையணி படைத் தளபதியின் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவின் அழைப்பின் பேரில், இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க சாலியபுரவில் இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார்.

கஜபா படையணியின் மறைந்த போர்வீரரின் 25வது நினைவேந்தல் நிகழ்வானது கஜபா படையணி தலைமையகத்தில் அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க தேரர் அதி வணக்கத்திற்குரிய வரகாகொட ஸ்ரீ ஞானரதன தலைமையில் இரவு முழுவதுமான 'பிரித்' பாராயண நிகழ்வும், அதனைத் தொடர்ந்து மறுநாள் (6) 100 பிக்குகளுக்கு தானம் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது.

அன்றைய சமய நிகழ்வுகள் ஆரம்பமாகுவதற்கு முன்னதாக, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க மற்றும் படையணி படைத் தளபதி, மறைந்த போர்வீரர்களின் குடும்ப உறுப்பினர்களுடன் இணைந்து போர் மாவீரர் நினைவிடத்தில் மலர் அஞ்சலி செலுத்தினர்.

நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, இராணுவத் தளபதி சில நிமிடங்களின் பின்னர் மறைந்த போர்வீரரின் புகைப்படத்தை திரை நீக்கம் செய்தார்.அதேநேரம் கஜபா படையணி படைத் தளபதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா, திருமதி விஜய விமலரத்ன ஆகியோர் இணைந்து புகைப்படத்திற்கு மாலை அணிவித்தனர். லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க மற்றும் திருமதி விமலரத்ன ஆகியோர் இந்த போர் வீரனைப் பற்றிய தங்கள் நினைவுகளை பார்வையாளர்களின் புத்தகத்தில் பதிவிட்டனர். இந்நிகழ்வை சிறப்பிக்கும் வகையில் இராணுவத் தளபதி கஜபா படையணி தலைமையகத்தில் மரக்கன்று ஒன்றையும் நாட்டினார்.

மறைந்த லெப்டினன்ட் ஜெனரல் டென்சில் கோபேகடுவா, மேஜர் ஜெனரல் விஜய விமலரத்ன, ரியர் அட்மிரல் மோகன் ஜெயமஹா, கேணல் எச்.ஆர் ஸ்டீபன், கேணல் ஜி.எச்.எச் அரியாரத்ன, கேணல் வை.என் டி பலிப்பான, கொமண்டர் அசங்க லங்காதிலக்க, லெப்டிணட் கேணல் நலின் டீ அல்விஸ், லெப்டிணட் கொமண்டர் சிபி விஜயபுர மற்றும் சிப்பாய் விக்கிரமசிங்க ஆகியோர் 1992 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 8 ஆம் திகதி யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை அராலி முனையில் விடுதலைப் புலிகளின் கண்ணிவெடிக்கு பலியாகினார்.