Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

26th December 2023 22:35:56 Hours

ஒழுக்க பணிப்பாளர் கிரிந்தலையில் நிர்மாணிக்கப்பட்ட புதிய கட்டிடம் திறந்து வைப்பு

இலங்கை இராணுவத்தின் ஒழுக்க பணிப்பாளர் நாயகமும் இலங்கை இராணுவப் பொலிஸ் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் எசீஎ த செய்சா யூஎஸ்பீ எச்டிஎம்சீ எல்எஸ்சீ அவர்கள் கிரிந்தலை இராணுவ பொலிஸ் பாடசாலைக்கு 24 டிசம்பர் 2023 அன்று உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டார்.

வருகை தந்த அவருக்கு இராணுவப் பொலிஸ் படையணியின் படையினரால் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டதை தொடந்து இராணுவப் பொலிஸ் பாடசாலையின் நிலைய தளபதி கேணல் டிடிடி செரேசிங்க யூஎஸ்பீ மற்றும் அனைத்து அதிகாரிகளால் வரவேற்கப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து மேஜர் ஜெனரல் எசீஎ டீ செய்சா யூஎஸ்பீ எச்டிஎம்சீ எல்எஸ்சீ அவர்கள் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட அதிகாரவாணையற்ற அதிகாரிகள் மற்றும் சாஜன் உணவகம் மற்றும் தங்குமிட கட்டிடத்தை பதாகை திரைநீக்கம் செய்து திறந்து வைத்தார்.

பின்னர் அனைத்து சிரேஷ்ட அதிகாரிகளும் இராணுவப் பொலிஸ் படையணியின் அதிகாரவாணையற்ற அதிகாரிகள் நீண்டகால தேவையை பூர்த்தி செய்யும் நவீன அம்சங்கள் மற்றும் பல வசதிகளை உள்ளடக்கிய புதிய வசதிகளையும் பார்வையிட்டார்.

பின்னர், வருகை தந்த படைத் தளபதி படையினருக்கு உரையாற்றியதுடன் சமகால சூழ்நிலைகளில் ஒரு பயிற்சியாளராக தனது தொலைநோக்கு யோசனைகள், வழிகாட்டுதல் மற்றும் படை வீரரி தளம் தொடர்பில் தனது கருத்தை வெளியிட்டார்.

மேலும், அனைத்து மட்டங்களிலும் ஒழுக்கத்தின் முக்கியத்துவம், இராணுவப் பயிற்சி, தனிப்பட்ட ஒழுக்கம், ஒழுக்க பணிப்பாகத்தின் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களின் தொழில்முறை அறிவை மேம்படுத்துவதற்கான வழி மற்றும் சிறந்த அர்ப்பணிப்பு சேவைகளின் தொடர்ச்சி ஆகியவற்றை அவர் எடுத்துரைத்தார்.

இந்நிகழ்வில் இராணுவப் பொலிஸ் பாடசாலையின் தளபதி, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் இராணுவப் பொலிஸ் படையணியின் நிரந்தரப் பணியாளர்கள் கலந்துகொண்டனர்.