09th July 2023 23:00:53 Hours
முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 64 வது காலாட் படைப் பிரிவினரால் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 02) ஜோர்ஜ் குணரத்ன மூக்குகண்ணாடி நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் நடமாடும் கண் மருத்துவ சிகிச்சை மற்றும் இலவசக் கண்ணாடிகள் இராணுவத்தின் வேண்டுகோளின் பேரில் ஒட்டுசுட்டான் தேசிய பாடசாலை கேட்போர் கூடத்தில் வழங்கப்பட்டது.
64 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எச்.டி.டபிள்யூ.கே.என் எரியகம ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ அவர்களால் வழங்கப்பட்ட கருத்தியல் வழிகாட்டலைத் தொடர்ந்து படையினரால் இத் திட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந்த நிகழ்வின் போது, கண் மருத்துவர்கள் பொதுமக்களின் கண் பார்வைகளை பரிசோதித்து ரூபாய் 3,60,000/= மதிப்பிலான 200 இலவச கண்ணாடிகளை வழங்கினர்.
64 வது காலாட்படைப்பிரிவின் தளபதி மற்றும் ஜோர்ஜ் குணரத்ன மூக்குகண்ணாடி நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் திரு லக்ஷ்மன் அபேகுணரத்ன ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து சிறப்பித்தனர். இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் பிரதேச மக்கள் கலந்துகொண்டனர்.