Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

26th July 2023 19:56:08 Hours

ஒட்டுசுட்டான் குடும்பங்களுக்கு 64 வது காலாட் படைப்பிரிவினால் சூரிய மின்குமிழ்கள் வினியோகம்

'அவுஸ்திரேலியா-இலங்கை நட்புறவு' அமைப்பின் உதவியுடன் முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 64 வது காலாட் படைப்பிரிவு படையினரால் சூரிய சக்தியில் இயங்கும் மின்குமிழ்களை விநியோகிக்கும் திட்டத்தை சனிக்கிழமை (22) முன்னெடுத்தனர்.

பாடசாலை செல்லும் பிள்ளைகளைக் கொண்ட குடும்பங்களுக்கு முன்னுரிமை அளித்து மின்சாரம் இல்லாத 60 குடும்பங்களுக்கு மின்குமிழ்கள் வழங்க இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது. இது பரீட்சைக் காலங்களில் மாணவர்களுக்கு பெரிதும் உதவியாக அமையும்.

முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எம்கே ஜயவர்தன ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ, 64 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எச்டிடபிள்யூகேஎன் எரியகம ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ அவர்களின் அழைப்பின் பேரில் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். பயனாளிகளின் வாழ்வாதாரத்தின் அவலநிலையை கருத்திற்கொண்டு அந்தந்த கிராம சேவகரின் கருத்துகளுக்கமைய இத்திட்டம் மேற்கொள்ளப்பட்டது.

முல்லைத்தீவு படையினரின் வேண்டுகோளுக்கு இணங்க ‘அவுஸ்திரேலியா-இலங்கை நட்புறவு’ அமைப்பு அந்த சூரிய சக்தி மின்குமிழ்களை கொள்வனவு செய்வதற்கு தேவையான நிதி உதவிகளை வழங்கியது. ‘அவுஸ்திரேலியா-இலங்கை நட்புறவு’ அமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தி, திரு பராக்கிரம கிரிஹாகம மற்றும் மேஜர் அருண பெரேரா (ஓய்வு) விநியோக நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் 64 வது காலாட் படைப்பிரிவின் தளபதி, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், கிராமசேவகர்களும் கலந்துகொண்டனர்.