Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

12th June 2024 21:47:18 Hours

ஐநா பிரதிநிதிகள் குழு லெபனான் இலங்கை பாதுகாப்பு படைக்கு விஜயம்

நியூயோர்க் ஐக்கிய நாட்டு தலைமையகத்தின் சிறப்புப் பிரதிநிதிக் குழு லெபனானில் உள்ள இலங்கை பாதுகாப்பு படைக்கு விஜயம் மேற்கொண்டது. இதன்போது பாலியல் துஷ்பிரயோக பாதுகாப்பு தொடர்பான விரிவான மதிப்பீட்டை 2024 ஜூன் 05 புதன்கிழமை நடத்தியது.

லெபனானில் உள்ள இலங்கை பாதுகாப்பு படை கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் டி.விதானகே ஆர்எஸ்பீ அவர்கள் ஐ.நா சிறப்பு பிரதிநிதி குழுவை மரியாதையுடன் வரவேற்றார். அதன்பின், பாலின மைய புள்ளி அதிகாரிகளால் மதிப்பீட்டு செயல்முறை நடத்தப்பட்டது. அதில், ஐக்கிய நாட்டு தரத்தின் பொறிமுறையுடன் பாலியல் தொடர்பு மற்றும் துஷ்பிரயோகங்கள், தவறான பாலியல் நடத்தை ஆகியவற்றைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக இக்குழு சிறப்பு கவனம் செலுத்தியது.