Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

13th November 2023 20:38:40 Hours

ஐ.நா நடத்தை மற்றும் ஒழுக்கம் குழுவினால் காவோ சூப்பர் முகாமிற்கு பாராட்டு

மாலி ஐக்கிய நாடுகளின் பமாகோவின் (மினுஸ்மா) நடத்தை மற்றும் ஒழுக்கக் குழு 5 வது இலங்கை அமைதி காக்கும் படையின் உபகரணங்களை காவோ சூப்பர் முகாமில் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 7) வழக்கமான ஆய்வை மேற்கொண்டது.

மினுஸ்மா பொதுச் செயலாளரின் முதன்மை ஆலோசகர் திரு. காந்தி சுக்ரி, அவர்கள் தனது குழுவுடன் ஆய்வில் பங்கேற்றதுடன், பொதுநல வசதிகளை தவறாக பயன்படுத்தாமை, பாலியல் துன்புருத்தலின்மை, அவசர நிலைகளில் செயல்பாட்டுத் தயார்நிலை எனபவற்றில் விதிகள் மற்றும் சட்டங்களை சிறப்பாக செயல்படுத்தியமைக்காக காவோ சூப்பர் முகாமின் தளபதியை குழு பாராட்டியது.