11th October 2023 23:09:14 Hours
லெபனான் ஐக்கிய நாடுகளின் இடைக்காலப் படையினரின் தலைமையகத்தில் சேவை செய்யும் பல்வேறு நாடுகளின் சமையல் நடைமுறைகளின் பன்முகத்தன்மையைக் முன்வைக்கும் நிமித்தம் ஆண்டின் சிறப்பம்சங்களில் ஒன்றான 'சர்வதேச உணவுத் திருவிழா மற்றும் கலாசார நிகழ்ச்சி 2023' வெள்ளிக்கிழமை (6 ஒக்டோபர்) நகோரா லெபனான் ஐக்கிய நாடுகளின் இடைக்காலப் படை தலைமையகத்தின் சர்வதேச பிஎக்ஸ் இல் இடம்பெற்றது.
லெபனான் ஐக்கிய நாடுகளின் இடைக்காலப் படை தலைமையகத்தில் பல்வேறு நாடுகளின் பன்முக பாரம்பரிய உணவுகள் மற்றும் கலாசார காட்சிகளை நிரூபிக்கும் நோக்கத்துடன் லெபனான் ஐக்கிய நாடுகளின் இடைக்காலப் படைத் தலைமையகம் நலன் மற்றும் பொழுதுபோக்கு குழு ஆண்டுதோறும் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்கிறது.
இலங்கைப் படையினரால் அமைக்கப்பட்ட விற்பனையகத்தில் 14 வது இலங்கைப் பாதுகாப்பு படை குழுவின் படையினரால் தயாரிக்கப்பட்ட இலங்கையின் பாரம்பரிய உணவு வகைகள் மற்றும் இலங்கை பானங்கள் வழங்கப்பட்டன. அத்துடன் இலங்கைப் படையினரின் கலிப்ஸோ குழுவினரின் கலாசார குழுவினர் நிகழ்த்திய நாட்டுப்புற நடனங்களும் இசைத்திறன்களும் கவர்ச்சியை சேர்த்தன.
இந்நிகழ்வில் லெபனான் ஐக்கிய நாடுகளின் இடைக்காலப் படைத் தலைமையகத்தின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் அரோல்டோ லாசரோசான்ஸ் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார், லெபனான் ஐக்கிய நாடுகளின் இடைக்காலப் படைத் தலைமையகத்தின் பிரதி படைத் தளபதி பிரிகேடியர் ஜெனரல் சோக் பகதூர் தாகல் மற்றும் லெபனான் ஐக்கிய நாடுகளின் இடைக்காலப் படைத் தலைமையகத்தின் நடவடிக்கை ஒத்துழைப்பு பணிப்பாளர் திருமதி மெல்வா குருச் ஆகியோர் கலந்து கொண்டனர்.
லெபனான் ஐக்கிய நாடுகளின் இடைக்காலப் படையின் சிரேஷ்ட அதிகாரிகள், சிவில் மக்கள், படையலகு கட்டளை அதிகாரிகள், 14 வது இலங்கைப் பாதுகாப்பு படை குழுவின் தளபதி லெப்டினன் கேணல் டி.பீ.எல்.டி களுஅக்கல, இரண்டாம் கட்டளை அதிகாரி மேஜர் டபிள்யூ.எம்.சி.கே.வன்னிநாயக்க மற்றும் அனைத்து அதிகாரிகளும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.