27th June 2023 21:53:21 Hours
மாலி ஐ.நா அமைதி காக்கும் பணிக்கான (மினுஸ்மா) இலங்கை அமைதிகாக்கும் படைக்கு 14 நாட்கள் முன்-பணி பயிற்சி பாடநெறி கட்டம் பி-I (பெண்) செவ்வாய்க்கிழமை (27) ஐநா இலங்கை அமைதி காக்கும் நடவடிக்கை பயிற்சி நிறுவனத்தில் இடம்பெற்றது.
இப் பாடநெறியில் இலங்கை சமிக்ஞைப் படையணி, இலங்கை இராணுவ மருத்துவப் படையணி, இலங்கை இராணுவப் பொலிஸ் படையணி, இலங்கை இராணுவப் பொதுச் சேவைப் படையணி மற்றும் இலங்கை இராணுவப் மகளிர் படையணிகளை பிரதிநிதித்துவப்படுத்தி 04 அதிகாரிகள் மற்றும் 35 சிப்பாய்கள் உள்ளடக்கிய 39 பேர் பாடநெறியில் கலந்துகொண்டனர்.
பயிற்சி தொகுதிகளை மதிப்பீடு செய்வதற்காக சமீபத்தில் ஐநா இலங்கை அமைதி காக்கும் நடவடிக்கை பயிற்சி நிறுவனத்திற்கு விஜயம் செய்த ஐ.நாவின் மதிப்பீடு மற்றும் ஆலோசனைக் குழுவினர் பயிற்சி தொகுதிகளில் அமைதி காக்கும் பெண்களின் எண்ணிக்கையை அதிகரிக்க பரிந்துரைத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பெண் பயிற்சியாளர்களுக்கான இந்தப் பாடத்திட்டமானது, மனிதாபிமான உதவி படை பாதுகாப்பு வழங்குதல், சம்பந்தப்பட்ட நாடு தொடர்பான சுருக்கமான விழிப்புணர்வு, மக்களை நிலைப்படுத்துதல் மற்றும் பாதுகாத்தல், பாதுகாப்புத் துறையை மீண்டும் கட்டியெழுப்புதல், பதவி உயர்வு மற்றும் பாதுகாப்பு போன்ற நடைமுறை மற்றும் தத்துவார்த்த அம்சங்களைக் கொண்டுள்ளதுடன், மனித உரிமைகள் மற்றும் குறிப்பாக மாலியின் ஆணையின்படி மேற்கொள்ளப்படும் கடமைகள் மற்றும் பொறுப்புகள் தொடர்பாகவும் பயிற்சியளிக்கப்பட்டது.
பங்கேற்பாளர்களுக்கு சான்றிதழ்களை விநியோகிப்பதற்கு முன்னர், ஐநா இலங்கை அமைதி காக்கும் நடவடிக்கை பயிற்சி நிறுவனத்தின் தளபதி பிரிகேடியர் சிஏ ராஜபக்ஷ ஆர்எஸ்பீ அவர்களால் நிறைவுரை வழங்கப்பட்டது.