28th May 2024 17:06:23 Hours
லெபனான் ஐக்கிய நாடுகளின் இடைக்காலப் படையின் மதிப்பீட்டுப் பிரிவின் ஐக்கிய நாடுகளின் அதிகாரிகள் 17 மே 2024 அன்று லெபனானில் உள்ள நகோராவில் உள்ள 15 வது இலங்கை இலங்கை அமைதி காக்கும் படையின் ஸ்ரீ பேஸ் முகாம் வளாகத்தில் முதலாம் காலாண்டில் உபகரணங்களை ஆய்வு செய்தனர்.
படையினர்களுக்காக நாட்டில் வழங்கப்படும் முக்கிய உபகரணங்கள் ஐநா தரநிலைகளின்படி மேற்கொள்ளப்படுகிறதா என்பதை சரிபார்க்க பாதுகாப்பு உபகரணங்கள் ஆய்வு, வழங்கல் ஆய்வு, மேற்கொள்ளப்படுகின்றன. இந்த ஆய்வின் பணியாளர் நிர்வாகம், சூழ்நிலை விழிப்புணர்வு, தகவல் தொடர்பு, பயிற்சி மற்றும் வழங்கல் முகாமை ஒப்பந்த விதிகளின்படி உள்ளனவா என ஐ.நா ஆய்வுக் குழுவால் சரிபார்க்கப்பட்டன.