20th July 2024 22:19:42 Hours
ஐக்கிய நாடுகளின் சிவில்-இராணுவ ஒருங்கிணைப்பு அதிகாரிகளின் பாடநெறி இலக்கம் 05 இலங்கை அமைதிகாக்கும் பணிக்கான நடவடிக்கை பயிற்சி நிறுவனத்தில் 2024 ஜூலை 19 ஆம் திகதி நிறைவடைந்தது.
இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த 25 மாணவ அதிகாரிகள், இலங்கை கடற்படையைச் சேர்ந்த இரண்டு பேர் மற்றும் பங்களாதேஷ், இந்தோனேசியா, மங்கோலியா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 6 வெளிநாட்டு மாணவர் அதிகாரிகளின் பங்கேற்புடன் ஜூலை 8 முதல் 19 வரை இந்தப்பாடநெறி நடைபெற்றது.
இப்பாடநெறியில் விரிவுரையாளர்கள் குழுவில் நான்கு பாட நிபுணர்கள் இடம்பெற்றனர்: சிங்கப்பூரைச் சேர்ந்த திரு. அலெக்ஸ் லீ, ஜெர்மனியைச் சேர்ந்த திரு. ஜென்ஸ் நோர்மன் ஹானே, அர்ஜென்டினாவைச் சேர்ந்த திரு. விக்டர் மானுவல் நுனேஸ் மற்றும் நேபாளத்தைச் சேர்ந்த பிரிகேடியர் ஜெனரல் (ஓய்வு) நரேஷ் சுப்பா.
நிறைவு விழாவில் பிரதம அதிதியாக இலங்கை இராணுவ பொலிஸ் படையணியின் படைத் தளபதியும் பொது பணி பணிப்பாளர் நாயகமுமான மேஜர் ஜெனரல் மேஜர் ஜெனரல் எஸ்ஏஎன்டி எதிரிசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ எச்டிஎம்சீ பீஎஸ்சீ அவர்கள் கலந்து கொண்டார்.
இலங்கை அமைதிகாக்கும் பணிக்கான நடவடிக்கை பயிற்சி நிறுவனத்தின் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் நிறைவு விழாவில் கலந்து கொண்டனர்.