Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

01st March 2024 16:10:54 Hours

ஊடகம் மற்றும் உளவியல் செயல்பாட்டு பணிபகத்தின் ‘உளவியல் செயலமர்வு – 2024/1’

ஊடகம் மற்றும் உளவியல் செயல்பாட்டு பணிப்பகம் 2024 பெப்ரவரி 26 முதல் 2024 மார்ச் 01, வரை, பூவெலிக்கடை சமிஞ்சை பயிற்சி பாடசாலையில் 'உளவியல் செயலமர்வு - 2024/1' யை நடாத்தியது, இதில் இராணுவத்தின் பல்வேறு படையணிகளைச் சேர்ந்த 37 அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

உளவியல் அறிமுகம், இலக்கு பார்வையாளர்களின் பகுப்பாய்வு, உளவியல் செயல்பாட்டு தயாரிப்பு மேம்பாடு, பிரசார பகுப்பாய்வு மற்றும் எதிர்-பிரசாரம், உளவியல் செயல்பாடுகளில் கலாசார மூலோபாய தாக்கம், சமூக ஊடகங்களின் தாக்கம் மற்றும் சமூக ஊடகங்களின் ஊடுருவல் உள்ளிட்ட முக்கியமான விடயங்கள் இந்த செயலமர்வில் ஆய்வு செய்யப்பட்டன.

துறைசார்ந்த அதிகாரிகள் மற்றும் நிபுணர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்த விரிவுரைகள் பங்கேற்பாளர்களுக்கு விலைமதிப்பற்ற அறிவை வழங்கியது. ஊடகம் மற்றும் உளவியல் செயல்பாட்டு பணிப்பகம் இந்த நிகழ்வை நேர்த்தியாக ஏற்பாடு செய்து, அதன் வெற்றியை உறுதி செய்தது.

01 மார்ச் 2024 அன்று பூவெலிக்கடை சமிஞ்சை பயிற்சி பாடசாலையில் நடைபெற்ற நிறைவு விழாவில் பிரதம அதிதியாக ஊடக மற்றும் உளவியல் செயற்பாட்டு பணிப்பக பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் கே.ஏ.என் ரசிக குமார என்டிசீ பீஎஸ்சி கலந்துக் கொண்டார்.