12th June 2023 18:50:36 Hours
61 வது காலாட் படைப்பிரிவின் 611 வது காலாட் பிரிகேட் தலைமையகம் மற்றும் 8 வது இலங்கை சிங்க படையணியின் அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு ‘உளவியல் மருத்துவ பராமரிப்பு’ குறித்த ஒரு நாள் விழிப்புணர்வு செயலமர்வு நடாத்தப்பட்டது. 611 வது காலாட் பிரிகேடின் பிரிகேடியர் கேஜிசிஎம்எச் கம்லத் ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் கலாநிதி ஜினஞ்சல ஷனிகா விஜேகுணசேகரவினால் கேகாலை பெரகலையில் உள்ள 611 வது காலாட் பிரிகேட் வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 4) இச்செயலமர்வு நடைபெற்றது.
பல நோய்களால் ஏற்படும் உளவியல் பிரச்சினைகளுக்கு தேவையான வழிகாட்டுதல்களை வழங்குவதே இந்த திட்டத்தின் நோக்கமாகும். இத் திட்டம் மன அழுத்தம் மற்றும் பதட்டம், மனச்சோர்வு போன்ற பலவிதமான உளவியல் சீர்கேடுகளை நிவர்த்திப்பதை உள்ளடக்கியதுடன், அதே நேரத்தில், பல்வேறு உளவியல் கோளாறுகள் தொடர்பாக அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு வழிகாட்டுதலையும் வழங்கியது.
இத் திட்டத்தின் இறுதியில், பங்கு பெற்ற அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் இந்த முயற்சிக்கு நன்றி தெரிவித்தனர். இந்த திட்டம் அவர்களின் உளவியல் பிரச்சினைகளை நன்கு புரிந்து கொள்ள உதவியது மற்றும் அவர்களின் நிலைமைகளை திறம்பட நிர்வகிப்பதற்கான வழிகாட்டுதல்களை அவர்களுக்கு வழங்கியது.
மேலும், வைத்தியர் விஜேகுணசேகர அவர்கள் பௌத்த போதனைகள் பற்றிய அறிவூட்டும் விரிவுரை அமர்வையும் (திங்கட்கிழமை) ஜூன் 05 அன்று 611 வது காலாட் பிரிகேட் வளாகத்தில் நடத்தினார். இந்த விரிவுரையில் சிரேஷ்ட அதிகாரிகள் அதிகாரிகள் உட்பட சுமார் 150 இராணுவ வீரர்கள் கலந்துகொண்டனர்.
மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மற்றும் 61 வது காலாட் பிரிகேட் பிரிவின் கட்டளைத் தளபதி ஆகியோரின் வழிகாட்டலின் கீழ் இத்திட்டம் நடத்தப்பட்டதுடன், இந்த விரிவுரை பௌத்த போதனைகளைப்பற்றி மேலும் அறிய இடம் அளித்தது. கலாநிதி விஜேகுணசேகர பௌத்த மதத்தின் அடிப்படைக் கோட்பாடுகள் மற்றும் நவீன கால வாழ்க்கையில் அவற்றின் பொருத்தம் பற்றிய ஆழமான பகுப்பாய்வை வழங்கினார்.