Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

04th January 2024 19:09:52 Hours

'இளம் கனிஷ்ட மற்றும் சிரேஷ்ட தேசிய பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் - 2023'

'இளம் கனிஷ்ட மற்றும் சிரேஷ்ட தேசிய பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் -2023' க்கான போட்டி டிசம்பர் 27-30 வரை பொலன்னறுவை கல்லல்ல தேசிய விளையாட்டு வளாகத்தில் இடம்பெற்றது. நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு பளுதூக்குதல் கழகங்களைச் சேர்ந்த பங்கேற்பாளர்கள் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்றனர்.

இந்தப் போட்டியில் இராணுவம், கடற்படை மற்றும் விமானப் படையினர் உட்பட மொத்தம் 11 விளையாட்டுக் கழகங்கள் போட்டியிட்டன. இலங்கை இராணுவப் பெண்கள் பளுதூக்கும் அணியானது போட்டியில் 3 வெள்ளி மற்றும் 2 வெண்கலப் பதக்கங்களை வென்று அபாரமான சாதனையை நிகழ்த்தியமை குறிப்பிடத்தக்கது.