16th February 2024 11:49:45 Hours
ஐ.நா இடைக்காலப் படையின் 14 வது இலங்கைப் பாதுகாப்பு குழுவின் கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் டி.பீ.ஐ.டி களுஅக்கல ஆர்எஸ்பீ யூஎஸ்பீ ஐஜி அவர்களுடன் பல அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் டயரில் நிலைகொண்டுள்ள மலேசிய அமைதி காக்கும் படையணி 2-1 க்கு 2024 பெப்ரவரி 12 விஜயம் மேற்கொண்டார்.
இந்த விஜயத்தின் போது, லெப்டினன் கேணல் டி.பீ.ஐ.டி களுஅக்கல ஆர்எஸ்பீ யூஎஸ்பீ ஐஜி மற்றும் புதிய மலேசிய அமைதி காக்கும் படையணி தளபதி, கேணல் புஹுரான் பின் சகோனி ஆகிய இருவரும் இணைந்து லெபனானின் தற்போதைய பாதுகாப்பு நிலைமைகள் குறித்து சுருக்கமான உரையாடலில் ஈடுபட்டனர். மலேசிய அமைதி காக்கும் படையணியின் படையினர் மற்றும் ஐ.நா இடைக்காலப் படையின் 14 வது இலங்கைப் பாதுகாப்பு குழுவின் படையினர் மேற்கொண்ட பொறுப்புகள் தொடர்பான அறிவுகளையும் அவர்கள் பரிமாறிக்கொண்டனர். அத்துடன் இரு தளபதிகளுக்குமிடையிலான பாராட்டுச் சின்னங்கள் பரிமாற்றிகொண்டதுடன் குழு படமும் எடுத்துகொண்டனர்.