26th December 2023 23:23:38 Hours
லெபனான் ஐ.நா இடைக்காலப் படையில் உள்ள 14 வது இலங்கைப் பாதுகாப்பு குழுவின் கட்டளை அதிகாரி கேணல் டி.பீ.ஐ.டி களுஅக்கல ஆர்எஸ்பீ யூஎஸ்பீ ஐஜி அவர்கள் சில அதிகாரிகளுடன் இணைந்து 24 டிசம்பர் 2023 அன்று கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு பருவகால பாராட்டுக்கள் மற்றும் நல்லெண்ணத்தை விரிவுபடுத்துவதற்காக லெபனான் ஐ.நா இடைக்காலப் பணி மற்றும் படையின் தளபதி லெப்டினன் ஜெனரல் அரோல்டோ லாசரோ சென்ஸ் அவர்களை சந்தித்தனர்.
இந்த விஜயத்தை தொடர்ந்து சிநேகபூர்வ மற்றும் முறையான கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன் போது லெபனான் ஐ.நா இடைக்காலப் படை தலைமையகத்தைப் பாதுகாப்பதில் இலங்கைப் பாதுகாப்பு படையினரின் அயராத அர்ப்பணிப்பு பாராட்டப்பட்டது.
குழுவினர் பதவி நிலைப்ப பிரதானி பிரிகேடியர் செட்ரிக் கார்டின் மற்றும் விசேட பணிநிலை பிரதானி கேணல் பெலிப் கியூட்டோ பெர்னாண்டஸ் ஆகியோரைச் சந்தித்து அவர்கள் ஒவ்வொருவருக்கும் நல்லெண்ணம் மற்றும் நினைவுகளின் அடையாளமாக நினைவுச் சின்னங்களை வழங்கினர்.