Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

22nd September 2024 17:25:10 Hours

இலங்கை ரைபில் படையணி மற்றும் இராணுவ முன்னோடி படையணியினால் சமூக உதவித் திட்டம்

இலங்கை இராணுவத்தின் 75 வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில், இலங்கை ரைபில் படையணி மற்றும் இராணுவ முன்னோடி படையணி ஆகியவற்றின் தலைமையகங்களினால் 6 செப்டம்பர் 2024 அன்று சமூக உதவித் திட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

இம்முயற்சி நாட்டு மக்களுக்கு சமூக சேவையில் இராணுவத்தின் அர்ப்பணிப்பை எடுத்துக் காட்டுகிறது.

பேராதனை டிகிரி சிறுவர் இல்லத்தில் 21 படையினர் சிரமதான திட்டத்தை முன்னெடுத்தனர்.

இந்த முயற்சி பிள்ளைகள் மற்றும் ஊழியர்களுக்கு ஆரோக்கியமான மற்றும் மிகவும் வரவேற்கத்தக்க சூழலை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டிருந்தது.

சிரமதானப் பணி மட்டுமள்ளாது, படையினர் 36 பிள்ளைகள் மற்றும் இல்லத்தின் ஊழியர்களுக்கு தேநீர் விருந்துபசாரம் வழங்கியமை சமூக மற்றும் கவனிப்பு உணர்வை ஏற்படுத்தியது. பிள்ளைகளின் இல்லத்தின் உடனடித் தேவைகள் சிலவற்றை நிவர்த்தி செய்து, அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் மருத்துவப் பொருட்களையும் அவர்கள் வழங்கினர்.

இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.