08th July 2023 21:01:42 Hours
இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணியின் அதிகாரிகளின் முதல் காலாண்டின் பயிற்சி நாள் திங்கட்கிழமை (ஜூன் 26) கொழும்பு 2 இல் உள்ள படையணி தலைமையகத்தில் படையலகுகள் மற்றும் தள பட்டறைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் 100 க்கும் மேற்பட்ட சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் அதிகாரிகளின் பங்குபற்றுதலுடன் வெற்றிகரமாக நிறைவுற்றது.
அன்றைய நிகழ்ச்சி நிரலின் முதல் நிகழ்வாக அதிகாரிகளுக்கு காலை உடற்பயிற்சி மற்றும் வாள் பயிற்சியினை தொடர்ந்து தெர்மல் ஆர் இன்டஸ்ட்ரீஸ் பிரைவேட் லிமிடெட்டின் ஸ்தாபகரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான திரு.சசிரங்க டி சில்வாவினால் ஆற்றப்பட்ட ‘எலக்ட்ரிகல் ஆட்டோமொபைல் டெக்னாலஜிஸ்’ (இலத்தரனியல் வாகன தொழிநுட்பம்) என்ற தலைப்பில் விருந்தினர் விரிவுரை நடைப்பெற்றது. அதன்பின், அசோசியேட்டட் மோட்டார்வேஸ் (பிரைவேட்) லிமிடெட் நிறுவனத்தின் சிரேஷ்ட பயிற்சியாளர் திரு ஜயந்த பண்டாரநாயக்க, ‘புதிய இலத்தரனியல் வாகன தொழில்நுட்பங்கள்’ என்ற தலைப்பில் விரிவுரையை நடத்தினார்.
மாலையில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வின் போது, புகழ்பெற்ற தலைமைத்துவ மற்றும் முகாமைத்துவ பயிற்றுவிப்பாளரான டாக்டர் ரணில் சுகததாச, படையணி அதிகாரிகளின் உணவகத்தில் அதிகாரிகளுக்கு ஊக்கமளிக்கும் விரிவுரையை நடத்தினார். இராணுவ வளங்கல் தளபதியும் மின்சாரம் மற்றும் இயந்திர பொறியியல் படையணி படைத்தளபதியுமான மேஜர் ஜெனரல் எஸ்பீஏஐஎம்பி சமரகோன் எச்டிஎம்சி எல்எஸ்சி, மின்சாரம் மற்றும் இயந்திர பொறியியல் பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ஜே ஏஆர்எஸ்கே ஜயசேகர யுஎஸ்பீ பீஎஸ்சி, மின்சாரம் மற்றும் இயந்திர பொறியியல் படையணி நிலைய தளபதி பிரிகேடியர் எஸ்ஏஎன் ஜே ஆரியசேன ஆகியோரும் இந் நிகழ்வில் பங்குபற்றினர்.