02nd August 2024 17:39:49 Hours
இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி சிரேஷ்ட அதிகாரவாணையற்ற அதிகாரிகளுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட கைத்தொழில் முகாமைத்துவ பாடநெறி எண். 02, 2024 ஜூலை 31 அன்று ஒருகொடவத்தையில் உள்ள இலங்கை-கொரியா தேசிய தொழிற்பயிற்சி நிறுவனத்தில் நிறைவடைந்தது.
பிரதி இராணுவ பதவி நிலை பிரதானியும் இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் எஸ்பீஎஐஎம்பி சமரகோன் எச்டிஎம்சீ எல்எஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் இராணுவ வீரர்களை தொழில்நுட்ப நிபுணர்களாக அங்கீகரிப்பதை இலக்காகக் கொண்டு ஆறு மாத கால பாடநெறி தொழிற்பயிற்சி அதிகாரசபை ஒத்துழைப்புடன் நடாத்தப்பட்டது.
இப் பாடநெறியின் முடிவில் சிரேஷ்ட அதிகாரவாணையற்ற அதிகாரிகள் பொதுநலவாய நாடுகளில் அங்கீகரிப்பட்ட தொழில்நிபுணத்துவ தகமை கொண்டவர்களாகின்றனர். பிரதி இராணுவ பதவி நிலை பிரதானியும் இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி படைத்தளபதியின் நிறைவுரையில் பங்கேற்பாளர்களின் சாதனைகள் மற்றும் தொழில்நுட்ப முகாமை திறன்விருத்தி தேர்ச்சி பெறுவதற்கான அர்ப்பணிப்பு குறித்து பெருமிதம் தெரிவித்தார்.
இலங்கை-கொரியா தேசிய தொழிற்பயிற்சி நிலையத்தின் உதவி பணிப்பாளர், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் நிறைவு விழாவில் பங்குபற்றினர்.