13th September 2023 20:31:31 Hours
இலங்கையில் தொழில்துறை தன்னியக்கம், பொருள் கையாளுதல் மற்றும் சுருக்கப்பட்ட காற்று தீர்வுகளை வழங்குவதில் முன்னணியில் உள்ள மெட்ரிக்ஸ் தனியார் நிறுவனம் இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணியின் 15 அதிகாரிகளுக்கு தயாரிப்பு விழிப்புணர்வு தொடர்பான சிறப்பு பட்டறையை புதன்கிழமை (செப்டெம்பர் 6) கொழும்பு ரேணுகா ஹோட்டலில் நிகழ்த்தியது.
மெட்ரிக்ஸ் தனியார் நிறுவனத்தின் அனுபவம் வாய்ந்த பொறியியலாளர்கள் குழுவினால் இந்த பட்டறை நடத்தப்பட்டது. பொறியியலாளர்கள் கம்ப்ரெஸ்டு ஏர் தீர்வுகள், பொருள் கையாளும் கருவிகள், மின் ஒட்டு உபகரணங்கள், ஆட்டோமேஷன் தீர்வுகள், மின்சாரம் மற்றும் கருவி தயாரிப்புகள், பாதுகாப்பு பொருட்கள், உள்ளிட்ட நிறுவனத்தின் சமீபத்திய தயாரிப்புகள் மற்றும் தொழில்துறை நுகர்பொருட்கள் சேவைகள் தொடர்பாக அறிவு வழங்கப்பட்டது.
இப் பட்டறையில் மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணியின் அதிகாரிகள் இந்தப் பகுதிகளில் உள்ள சமீபத்திய தொழில்நுட்பங்கள் மற்றும் போக்குகள் பற்றி அறிந்து கொண்டனர். இப் பட்டறையில் பொறியியலாளர்களிடம் கேள்விகள் கேட்கவும், தெளிவுபடுத்தவும் அவர்களுக்கு வாய்ப்பு கிடைத்தது.
மின்சார மற்றும் இயந்திர பொறியியல் பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ஜேஎஆர்எஸ்கே ஜயசேகர யூஎஸ்பீ பீஎஸ்சீ உட்பட பல்வேறு மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணியின் படையலகுகளை பிரதிநிதித்துவப்படுத்தி 14 அதிகாரிகள் இந்த செயலமர்வில் பங்கேற்றனர்.
மெட்ரிக்ஸ் தனியார் நிறுவனத்தின் அதிகாரிகள், உப தலைவர் திரு. ரஞ்சித் சல்பிட்டிகோரள, மெட்ரிக்ஸ் தனியார் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் திரு. சமன்தென்னகோன், மற்றும் - பொது முகாமையாளர் திரு. ரஜித் ரணசிங்க ஆகியோர் செயலமர்வை நடாத்துவதற்கு தமது ஒத்துழைப்பை வழங்கினர்.