Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

29th October 2024 14:17:53 Hours

இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி அதிகாரிகளுக்கு ஒரு நாள் பயிற்சி செயலமர்வு

மின்சார மற்றும் இயந்திர பொறியியலாளர் பணிப்பக பணிப்பாளர் பிரிகேடியர் பி.விதானகே அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, இலங்கையின் முன்னணி டயர் உற்பத்தியாளர்களில் ஒன்றான பெரென்டினோ டயர் கூட்டுத்தாபன (தனியார்) நிறுவனம் ஒரு நாள் செயலமர்வினை 2024 ஒக்டோபர் 25ஆம் திகதி நடாத்தியது. இச் செயலமர் ஆனது தொழிற்சாலை விஜயம் மற்றும் மின்சார மற்றும் இயந்திர பொறியியல் பணியாளர்களின் தொழிநுட்ப திறன்களை மேம்படுத்தும் அமர்வையும் கொண்டிருந்தது.

இச்செயலமர்வில் மின்சார மற்றும் இயந்திர பொறியியல் அதிகாரிகளுக்கு டயர் பற்றிய விரிவான விளக்கம் வழங்கப்பட்டதுடன், டயர் உற்பத்தி செயல்முறையின் செயல்விளக்கங்களும் வழங்கப்பட்டன. மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணியின் இருபத்தைந்து அதிகாரிகள் நிகழ்வில் பங்கேற்றதுடன் அவர்கள் இப்பயனுள்ள செயலமர்வினை வழங்கிய பெரென்டினோ அதிகாரிகளுக்கு தங்கள் நன்றியைத் தெரிவித்தனர்.