07th August 2024 18:41:07 Hours
மின்சாரம் மற்றும் இயந்திர பொறியியல் பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் எஸ்ஏஎன்ஜே ஆரியசேன அவர்களின் கருத்து மற்றும் வேண்டுகோளிற்கமைய சியெட் களனி சர்வதேச டயர்ஸ் (தனியார்) நிறுவனம் 02 ஆகஸ்ட் 2024 அன்று அதன் வளாகத்தில் ஒரு நாள் பட்டறையை நடத்தியது.
இலங்கை இராணுவத்தின் வாகன பராமரிப்பு தொழில்நுட்ப நிபுணத்துவத்தை மேம்படுத்தும் வகையில் இந்த பயிற்சி பட்டறையில் டயர் உற்பத்தி மற்றும் தொழில்நுட்ப விவரங்கள் தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டது. இப் பயிற்சி இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணியைச் சேர்ந்த 25 அதிகாரிகளுக்கு இது ஒரு மகத்தான கற்றல் அனுபவத்தை வழங்கியது.
நிகழ்வின் முடிவில், சியெட் களனி சர்வதேச டயர்ஸ் (தனியார்) நிறுவனத்தின் ஊழியர்களுக்கு அதிகாரிகள் நன்றி தெரிவித்தனர்.