05th June 2023 19:10:54 Hours
பொசன் பௌர்ணமி தினத்திற்கு இணையாக இலங்கை ஒழுக்க பாதுகாப்பு பணிப்பக பணிப்பாளர் நாயகமும் இராணுவ பொலிஸ் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் ஏசிஏடி சொய்சா யுஎஸ்பீ எச்டிஎம்சீ எல்எஸ்சீ மற்றும் இலங்கை பொலிஸ் படையணியின் சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி பிரியந்திகா டி சொய்சா ஆகியோரின் வழிகாட்டுதலின் கீ்ழ் இராணுவ பொலிஸ் படையணியினால் பல சமய நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டன.
மத அனுஷ்டானங்களும் சடங்குகளும் கிரித்தலை இராணுவ பொலிஸ் பாடசாலையில் அந்தந்த படையலகுகளின் படையினர், பாடசாலை மாணவர்கள் மற்றும் கிராமத்தினரின் ஒத்துழைப்புடன் நடத்தப்பட்டன. அனைத்து ஏற்பாடுகளும் இலங்கை பொலிஸ் படையணியின் நிலையத் தளபதி பிரிகேடியர் எஎம்ஆர் அபேசிங்க அவர்களின் நெருக்கமான மேற்பார்வையின் கீழ் முன்னெடுக்கப்பட்டன.'சில்' எடுத்தல், போதி பூஜைகள், அன்னதானம், பொசன் பக்தி கீதம் மற்றும் பொசன் வெளிச்சக் கூடுகள் ஆகியன முக்கியத்துவம் பெற்றன.