06th April 2023 18:15:43 Hours
இலங்கை பொறியியல் படையணி தலைமையகம் அதன் படைத்தளபதியான மேஜர் ஜெனரல் எம்.கே ஜயவர்தன அவர்களின் கருத்தியல் வழிகாட்டுதலின் பேரில் 2023 ஏப்ரல் 01 ஆம் திகதி பனாகொடவில் உள்ள இலங்கை பொறியியல் படையணி தலைமையகத்தின் படையினருக்கான 'சைக்கிள் சுற்றுப்பயணத்தை' ஏற்பாடு செய்திருந்தது.சைக்கிள் பயணமானது பனாகொட, தலகல சந்தி, மொரகஹஹேன, ஹொரண, ஏகல்ஓயா, புலத்சிங்கள ஆகிய பகுதிகளை உள்ளடக்கி 43 கிலோமீற்றர் தூரத்துடன் தெல்மெல்ல ஓயாவில் நிறைவடைந்தது.
அதிகாரிகள் மற்றும் படையினர் இணைந்து கொண்ட இந்த நிகழ்வானது அவர்களுக்கு இருக்கும் உடல் ஆரோக்கியம், உடற்தகுதி மற்றும் சகிப்புத்தன்மையை மேம்படுத்துவதற்காக அமைந்திருந்தது. சுற்றுப்பயணத்திற்குப் பிறகு அழைப்பின் பேரில் இலங்கை பொறியியல் படையணி தலைமையகத்திற்க்கு வருகைதந்திருந்த படையினரின் வாழ்க்கை துணைவியருடன் மதிய விருந்துபசாரம் அனைவரையும் மகிழ்ச்சியில் ஆற்றியது. சுமார் 50 சிரேஷ்ட அதிகாரிகள் இந் நாள் ஏற்பாட்டிற்கு பங்களித்தனர்.