Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

02nd February 2025 20:47:03 Hours

இலங்கை பொறியியல் படையணி சேவை வனிதையரினால் ஊனமுற்ற முன்னாள் இராணுவ படையினருக்கு மின்சார முச்சக்கர வண்டிகள் நன்கொடையக வழங்கல்

இலங்கை பொறியியல் படையணி சேவை வனிதையரினால் ஊனமுற்ற முன்னாள் இராணுவ படையினருக்கு தனது உறுதியான அர்ப்பணிப்பை, 2025 பெப்ரவரி 01 சனிக்கிழமை அன்று இலங்கை பொறியியல் படையணி தலைமையகத்தில் மூன்று மின்சார முச்சக்கர வண்டிகளை நன்கொடையாக வழங்குவதன் மூலம் மீண்டும் உறுதிப்படுத்தியது.

இந்த உன்னத முயற்சி, தேசத்திற்காக தன்னலமின்றி தியாகம் செய்த போர் வீரர்களை கௌரவிப்பதிலும் ஆதரிப்பதிலும் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கிறது.

இந்த முயற்சி இலங்கை பொறியியல் படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஏஎச்எல்ஜி. அமரபால ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ மற்றும் இலங்கை பொறியியல் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சுரங்கி அமரபால ஆகியோரின் தொலைநோக்கு வழிகாட்டுதலால் மேற்பார்வையிடப்பட்டது.

ஊனமுற்ற போர் வீரர்களின் நலனுக்கான அவர்களின் அர்ப்பணிப்பு, நாட்டிற்கு சேவை செய்தவர்களுக்கு தொடர்ச்சியான ஆதரவை உறுதி செய்யும் பல தாக்கத்தை ஏற்படுத்தும் திட்டங்களை முன்னெடுத்துள்ளது.

லங்கா ஐஓசி பிரைவேட் லிமிடெட்டின் நிர்வாக இயக்குநர் திரு. தீபக் தாஸ் அவர்களின் நிதி உதவியால் இந்த நன்கொடை நிகழ்வு முன்னெடுக்கப்ட்டது. இந்த மின்சார முச்சக்கர வண்டிகள், ஊனமுற்ற வீரர்களுக்கான மேம்பட்ட இயக்கம் மற்றும் சுதந்திரத்தை வழங்குவதுடன் மேலும் பயன்பாட்டிக்கு எளிமையக வடிவமைக்கப்பட்டுள்ளது.