25th May 2024 13:26:35 Hours
மின்னேரியாவில் உள்ள இலங்கை பீரங்கி படையணி பாடசாலையில் 23 மே 2024 அன்று போதி பூஜையுடன் வெசாக் திருவிழா கொண்டாடப்பட்டதுடன் அதைத் தொடர்ந்து 24 மே 2024 அன்று மரவள்ளிக்கிழங்கு மற்றும் ரொட்டி தானம் வழங்கல் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் 2000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
அதேசமயம், வெசாக் பண்டிகையை ஒட்டி, 2024 மே 23 அன்று பனாகொட, ஹபரகட நுழைவாயிலில் அருகில் பலாகாய் மற்றும் கொண்டைக்கடலை தானம் வழங்கலை இலங்கை இராணுவத்தினர் வழங்கினர்.
பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவிதாரிகள் கல்லூரி தளபதியும் இலங்கை பீரங்கி படையணி படைத்தளபதியுமான மேஜர் ஜெனரல் பிகேஜீஎம்எல் ரொட்ரிகோ ஆர்எஸ்பீ பீஎஸ்சி ஐஜீ அவர்கள் இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டார். இலங்கை பீரங்கி படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி.சுவெந்திரினி ரொட்ரிகோ, பாதுகாப்பு பதவி நிலை பிரதானி காரியாலய பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் கேவிஎன்பீ பிரேமரத்ன ஆர்எஸ்பீ யுஎஸ்பீ பீஎஸ்சி, சிரேஷ்ட அதிகாரிகள், அவர்களது மனைவிமார், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டனர்.