24th April 2025 10:09:24 Hours
இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சுமங்கலி பத்திரவிதான அவர்களின் தலைமையில், 2025 மார்ச் 05 அன்று இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி தலைமையமையக வளாகத்தில் தேங்காய் தும்பு வெட்டும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
இந்த முயற்சி இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியின் போர்வீரர்கள், அவர்களது குடும்பத்தினர் மற்றும் பொதுமக்களை ஆதரிப்பதற்காக நிதி திரட்டுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தத் திட்டம் இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி மற்றும் உறுப்பினர்கள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களின் பங்கேற்புடன் அதிகாரப்பூர்வமாகத் ஆரம்பித்துவைக்கப்பட்டது.