Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

12th February 2024 11:20:50 Hours

இலங்கை சிங்கப் படையணியின் படையலகுகளுக்கிடையிலான நீச்சல் போட்டி - 2024

8 வது இலங்கை சிங்கப் படையணி படையினரால் ஏற்பாடு செய்யப்பட்ட 2024 ஆம் ஆண்டிற்கான இலங்கை சிங்கப் படையணியின் படையலகுகளுக்கு இடையிலான நீச்சல் போட்டி, அம்பேபுஸ்ஸ இலங்கை சிங்கப் படையணி தலைமையகத்தில் 2024 பெப்ரவரி 08 ஆம் திகதி நடைபெற்றது. வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியும் இலங்கை சிங்கப் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் டபிள்யூபீஏடிடபிள்யூ நாணயக்கார ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யுஎஸ்பீ என்டியூ அவர்கள் இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.

1 வது இலங்கை சிங்கப் படையணியின் நீச்சல் குழு சாம்பியன்ஷிப்பை பெற்றுக் கொண்டதுடன், 11 வது இலங்கை சிங்கப் படையணியின் நீச்சல் குழு இரண்டாம் இடத்தைப் பெற்றுக்கொண்டது. 1 வது இலங்கை சிங்கப் படையணியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சிப்பாய் ஈஎம்கேஜிஎஸ் பண்டார இப்போட்டியில் சிறந்த நீச்சல் வீரராகத் தெரிவு செய்யப்பட்டார்.

சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இப்போட்டியை கண்டுகளித்தனர்.