Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

15th February 2023 18:31:07 Hours

இலங்கை சிங்கப் படையணி தலைமையகத்தில் அதிகாரம் ஆணையற்ற அதிகாரிகளுக்கு புத்துணர்ச்சி பாடநெறி

உபகரண பணிப்பாளர் நாயகமும் இலங்கை சிங்க படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் பிரியந்த ஜயவர்தன அவர்கள் வெள்ளிக்கிழமை (11) அம்பேபுஸ்ஸ இலங்கை சிங்க படையணி தலைமையகத்தில் நடாத்தப்பட்ட சிரேஷ்ட அதிகார ஆணையற்ற அதிகாரிகள் புத்துணர்ச்சி பாடநெறியின் நிறைவு விழாவில் கலந்துகொண்டார்.

இலங்கை சிங்க படையணியின் பிரதி நிலையத் தளபதி கேணல் வஜிர அமரசிறி அவர்கள் நிகழ்விடத்திற்கு வருகை தந்த படையணியின் படைத் தளபதியை மரியாதையுடன் வரவேற்றார். மேலும் இலங்கை சிங்கப் படையணியின் பொதுப்பணிநிலை அதிகாரி - 1 அவர்களால் பிரதம அதிதியை உரையாற்ற அழைக்கப்பட்டார்.

மேஜர் ஜெனரல் பிரியந்த ஜயவர்தன அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் இலங்கையின் 75 வது சுதந்திர தினத்துடன் இணைந்து நிலை உயர்வு பெற்ற 195 சிரேஷ்ட அதிகார ஆணையற்ற அதிகாரிகளுக்காக இந்த புத்துணர்ச்சி பாடநெறி நடாத்தப்பட்டது.

இப்பாடநெறியில் அணிவகுப்பு,தலைமைத்துவம், ஆசாரம், தகவல் தொடர்பு நுட்பங்கள், இராணுவச் சட்டம், அமைப்பு மற்றும் பல துறைகளை உள்ளடக்கிய பாடநெறி ஏழு நாட்கள் தொடர்ந்தது.

தளபதியின் உரையின் போது, இராணுவத்தில் அவர்களின் பொறுப்புகளை வெற்றியடையச் செய்வதற்கு தனிமனிதனின் அறிவு, அனுபவம், ஒழுக்கம், உந்துதல் மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றின் மதிப்பை அவர் எடுத்துரைத்தார். இந்நிகழ்ச்சியில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் பயிற்றுவிப்பாளர்கள் கலந்து கொண்டனர்.