13th March 2023 20:20:57 Hours
2 வது (தொ) இலங்கை சிங்கப் படையினரால் ஏற்பாடு செய்யப்பட்ட இலங்கை சிங்கப் படையணின் தடகளப் போட்டி -2023, கண்டி திகன விளையாட்டு மைதானத்தில் 2022 மார்ச் 04 - 05 வரை நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியான உபகரண பணிப்பாளர் நாயகமும், இலங்கை சிங்கப் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் பிரியந்த ஜயவர்தன மற்றும் இலங்கை சிங்கப் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஒமிலா ஜயவர்தன அவர்களும் கலந்து கொண்டனர்.
எதிர்காலத்தில் இலங்கை சிங்கப் படையணியின் தடகளத் துறையில் புதிய நம்பிக்கையை உருவாக்கும் வகையில், அனைத்துப் படையலகுகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் சுமார் 220 நம்பிக்கைக்குரிய மற்றும் ஆற்றல் மிக்க இலங்கை சிங்கப் படையணியின் இளம் தடகள வீரர்கள், இரண்டு நாட்கள் நடைபெற்ற தடகளப் போட்டிகளில் பங்கு பற்றினர். தடகள போட்டிகள் சனிக்கிழமை 04 ஆரம்பமானது.
சாம்பியன்ஷிப் போட்டியானது 1500 மீ, 100 மீ, 400 மீ மற்றும் 4 x 400 மீ அஞ்சல் ஓட்டங்களில் இறுதிப் போட்டிகளின் தொடக்கத்துடன் தொடங்கியது. 15 வது (தொ) இலங்கை சிங்கப் படையணியின் விளையாட்டு வீரர்கள் 198 புள்ளிகளுடன் முதலாம் இடத்தைப் பெற்றனர், 2 வது (தொ) இலங்கை சிங்கப் படையணியின் அணி 90 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்தனர், 4 வது இலங்கை சிங்கப் படையணியின் அணியினர் 44 புள்ளிகளைப் பெற்று மூன்றாவது இடத்தைப் பெற்றனர்.
பிரதம அதிதி இலங்கை சிங்கப் படையணியின் சிறந்த சாதனைகள் குறித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதுடன் வெற்றியாளர்களுக்கு வெற்றிக் கிண்ணங்கள் மற்றும் பதக்கங்களை விநியோகிக்கும் போது அவர்கள் ஒவ்வொருவரையும் வாழ்த்தினார்.
பிரதம அதிதியின் நிறைவு அறிக்கையைத் தொடர்ந்து நிகழ்வின் சம்பிரதாய நிறைவு நிகழ்வு இடம்பெற்றது. படையணியின் சிரேஷ்ட அதிகாரிகள், இலங்கை சிங்கப் படையணியின் கட்டளை அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் நிகழ்வில் கலந்து கொண்டனர்.