17th May 2023 06:33:11 Hours
இலங்கை சிங்க படையணியின் இளநிலை அதிகாரிகளுக்கு ‘அறிவு, அணுகுமுறைகள், கடமைகள் மற்றும் நிபுணத்துவம்’ என்ற தலைப்பில் ஐந்து நாட்கள் செயலமர்வு 9-13 மே 2023 ம் திகதி வரை அம்பேபுஸ்ஸ இலங்கை சிங்க படையணி தலைமையகத்தில் இடம் பெற்றது.
இலங்கை சிங்க படையணியின் படைத் தளபதியும் வழங்கல் பணிப்பாளர் நாயகமுமான மேஜர் ஜெனரல் ஜிஆர்ஆர்பீ ஜயவர்தன ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் இந்த செயலமர்வு இலங்கை சிங்க படையணியின் நிலைய தளபதி பிரிகேடியர் சிஜி திப்பொட்டுகே அவர்களின் நெருக்கமான மேற்பார்வையின் கீழ் நடாத்தப்பட்டது.
இச் செயலமர்வில் 29 இளநிலை அதிகாரிகள் பங்குபற்றியதுடன் தங்கள் அறிவைப் புதுப்பித்து, படையணி வரலாறு, போர் கல செயல்முறைகள், சர்வதேச உறவுகள், படையலகு நிர்வாகம், சம்பளம் மற்றும் பதிவுகள், குழு செயற்பாடு, இராணுவ நெறிமுறைகள் மற்றும் பேச்சு திறன் என்பவற்றில் தமது அறிவை மேம்படுத்தி கொண்டனர்.
செயலமர்வில் நிறை உரையை சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் படை தளபதி ஆற்றினார்.