Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

24th July 2024 17:34:29 Hours

இலங்கை சிங்க படையணியின் படையலகுகளுக்கு இடையிலான கராம் சாம்பியன்ஷிப் போட்டி

படையலகுகளுக்கு இடையிலான கராம் சாம்பியன்ஷிப் போட்டி 21 வது இலங்கை சிங்க படையணியின் ஏற்பாட்டில் 2024 ஜூலை 18 மற்றும் 19 ம் திகதிகளில் அம்பேபுஸ்ஸ இலங்கை சிங்க படையணி தலைமையகத்தில் நடைப்பெற்றது.

இந்நிகழ்வில் இலங்கை சிங்க படையணியின் நிலைய தளபதி பிரிகேடியர் சி எஸ் திப்பொட்டுகே அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டதுடன், இலங்கை சிங்க படையணி சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் அதிகாரிகள் போட்டியைக் கண்டுகளித்தனர்.

இப்போட்டிகளில் 4 வது இலங்கை சிங்க படையணி வெற்றி பெற்றதுடன் 1 வது இலங்கை சிங்க படையணி இரண்டாம் இடத்தினை பெற்றது. மேலும் படையணி தலைமையக அணி ஒற்றையர் பிரிவில் முதலாம் மற்றும் இரண்டாம் இடத்தினை வென்றது.போட்டியின் முடிவுகள் பின்வருமாறு:

ஒற்றையர் போட்டிகள்

முதலாமிடம் – கோப்ரல் டிஜே ரோஹான் – சிங்க படையணி தலைமையக தலைமையக படையலகு

இரண்டாமிடம் – கோப்ரல் பீடப்ளியூ இரேஷ் சன்ஜய - சிங்க படையணி தலைமையகம்

மூன்றாமிடம் – லான்ஸ் கோப்ரல் ஆர்ஏஏஆர்டீ சமரசிங்க – 3 வது (தொ) சிங்க படையணி

இரட்டையர் போட்டி

முதலாமிடம் – கோப்ரல் கே எஸ்ஏஎஸ்எஸ் துஷார/ கோப்ரல் டப்ளியூ டப்ளியூ டி பீ பீ இலங்கரத்ன 4 வது சிங்க படையணி

இரண்டாமிடம் லான்ஸ் கோப்ரல் எம்பீகேகே ராஜரத்ன/ சிப்பாய் டிஎம்ஜீடீ நந்தசேன 1 வது சிங்க படையணி

மூன்றாமிடம் – பணநிலை சார்ஜன் டீ எம் குமாரசிங்க / கோப்ரல் கே ஜீஜீஎஸ்ஜே அத்தரகம – 3 வது (தொ) சிங்க படையணி