30th April 2025 15:40:03 Hours
இலங்கை சிங்க படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி இந்துனில் ஜயக்கொடி அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், 2025 ஏப்ரல் 25 அன்று நெலுந்தெனிய முதியோர் இல்லத்தில் 22 முதியோர்களுக்கு நன்கொடை வழங்கும் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.
நிகழ்வின் போது, முதியோர்களுக்கு இரவு உணவு வழங்கப்பட்டதுடன், முதியோர் பயன்பாட்டிற்காக அத்தியாவசியப் பொருட்கள் நன்கொடையாக வழங்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து இலங்கை சிங்க படையணி கலிப்சோ இசைக்குழுவின் பொழுதுபோக்கு இசைநிகழ்வும் இடம்பெற்றது.
பின்னர், இலங்கை சிங்க படையணி சேவை வனிதையர் பிரிவினர், முதியோர் இல்லத்தின் நலன்புரி வசதிகளை ஆதரிக்கும் வகையில் நிதி நன்கொடை வழங்கினர். இலங்கை சிங்க படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.