22nd April 2025 12:06:59 Hours
இலங்கை சிங்க படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி இந்துனில் ஜயக்கொடி அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், 5 வது இலங்கை சிங்கப் படையணியின் மறைந்த அதிகாரவாணையற்ற அதிகாரியின் குடும்பத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் நன்கொடை வழங்கும் திட்டம் 2025 ஏப்ரல் 06 ஆம் திகதி முன்னெடுக்கப்பட்டது.
நன்கொடை திட்டத்தில் இலங்கை சிங்க படையணி சேவை வனிதையர் பிரிவினர் வழங்கிய நிதியுதவியில் உலர் உணவுப் பொதிகள் நன்கொடையாக வழங்கப்பட்டன. மேலும் முன்று பிள்ளைகளுக்கு இலங்கை சிங்க படையணி சேவை வனிதையர் பிரிவின் முன்னாள் தலைவி திருமதி ஷிரோமி மசகோரல அவர்களால் நிதி உதவி வழங்கப்பட்டது.
இலங்கை சிங்க படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி செயலாளருடன் இணைந்து, அவர்களின் இல்லத்திற்கு நேரில் சென்று நன்கொடைகளை வழங்கினார்.