29th December 2023 20:55:37 Hours
பண்டிகைக் காலத்தை முன்னிட்டு 3,4 மற்றும் 9 வது இலங்கை சமிக்ஞை படையணி ஆகியவற்றின் ஓய்வுபெற்ற அனுராதபுரம், குருநாகல், வவுனியா, புத்தளம், மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் உள்ள அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுக்கான சமூக ஒன்றுகூடல் நிகழ்வு 4 வது இலங்கை சமிக்ஞை படையணியில் 2023 டிசம்பர் 23 அன்று நடைபெற்றது.
இலங்கை இராணுவத்தின் பிரதம சமிக்ஞை அதிகாரியும், இலங்கை சமிக்ஞைப் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் கேஏடபிள்யூஎஸ் ரத்நாயக்க என்டியூ அவர்களின் ஆலோசனையின் பேரில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டது. 78 ஓய்வுபெற்ற அனைத்து நிலையினரும் ஒன்றுகூடி, தங்கள் சேவையின் போது கடந்த கால நினைவுகளை நினைவுகூர்ந்து மகிழ்வுற்றனர்.
மங்கல விளக்கு ஏற்றி தாய்நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. 3 வது இலங்கை சமிக்ஞைப் படையணியின் கட்டளை அதிகாரி கூட்டத்தில் உரையாற்றியதுடன், இலங்கை சமிக்ஞைப் படையணியின் அண்மைக்கால தொழில்நுட்ப மேம்பாடுகள் குறித்து வீடியோ காட்சிப்படுத்தப்பட்டது.
இசைக் குழுவின் இசை நிகழ்ச்சி மற்றும் மதிய உணவுடன் அன்றைய நிகழ்ச்சிகள் அனைத்தும் முடிவுக்கு வந்தன.