06th February 2025 09:54:42 Hours
இலங்கை சமிக்ஞைப் படையணி சேவை வனிதையர் பிரிவின் 15 வது தலைவியாக பனாகொடை படையணி தலைமையகத்தில் திருமதி ஆயிஷா லியனகே அவர்கள் 2025 ஜனவரி 25 கடமைபொறுப்பேற்றார்.
வருகை தந்த புதிய தலைவியை இலங்கை சமிக்ஞை படையணி சேவை வனிதையர் பிரிவின் பிரதி தலைவி அவர்கள் மரியாதையுடன் வரவேற்கப்பட்டதை தொடர்ந்து அவர் கடமைகளை பொறுப்பேற்று கொண்டதை குறிக்கும் வகையில் உத்தியோகபூர்வ ஆவணத்தில் கையெழுத்திட்டார். பின்னர், புதிய தலைவி கூட்டத்தில் உரையாற்றியதுடன் நிர்வாகக் குழு நியமிக்கப்பட்டது.
இலங்கை சமிக்ஞை படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் அதிகாரிகள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.