Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

27th April 2025 18:01:43 Hours

இலங்கை சமிக்ஞை படையணி சேவை வனிதையரால் சக்கர நாற்காலி நன்கொடை

இலங்கை சமிக்ஞை படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஆயிஷா லியனகே அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், இலங்கை சமிக்ஞை படையணி சேவை வனிதையர் பிரிவு 2025 ஏப்ரல் 17 ஆம் திகதி 2 வது (தொ) இலங்கை சமிக்ஞை படையணியில் வடக்கு மனிதாபிமான நடவடிக்கையின் போது காயமடைந்த இலங்கை சமிக்ஞை படையணியின் அதிகாரவாணையற்ற அதிகாரிக்கு சக்கர நாற்காலியை நன்கொடையாக வழங்கியது.

அவரது அர்ப்பணிப்பை அங்கீகரிக்கும் விதமாக, இலங்கை சமிக்ஞை படையணி சேவை வனிதையர் பிரிவு அவரது வீட்டு வேலைகளையும் தேவைகளையும் பூர்த்தி செய்ய ஒரு நிலையான சக்கர நாற்காலி மற்றும் ஒரு கமோட் சக்கர நாற்காலியை நன்கொடையாக வழங்கியது.