14th September 2023 20:21:55 Hours
மனித உரிமைகள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்டம் தொடர்பான இலக்கம் 26 பாடநெறியானது குக்குலேகங்க இலங்கை சமாதன ஒத்துழைப்பு நடவடிக்கை பயிற்சி நிலையத்தில் 2023 ஓகஸ்ட் ஆரம்பமானதுடன் இப் பாடநெறி செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 12) நிறைவடைந்தது.
மனித உரிமைகள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்ட பணிப்பகத்தினரால் மனித உரிமைகள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்ட பணிப்பகத்தின் கேணல் என்எஸ் நல்லெபெருப யூஎஸ்பீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் இப் பாடநெறி வடிவமைக்கப்பட்டது. இந்த பாடநெறியில் இராணுவம் (17), கடற்படை (3) மற்றும் விமானப்படை (2) அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மனித உரிமைகள் மற்றும் சர்வதேச மனிதாபிமானச் சட்டம், அதன் ஆழமான தாக்கங்கள் மற்றும் மனிதாபிமான மற்றும் சட்ட அம்சங்கள் தொடர்பாக அதிகாரிகளுக்கு அறிவூட்டுவது, அத்தகைய மீறல்களைத் தடுப்பதற்கான மாற்று நடவடிக்கைகளை வழங்குவது இந்த பாடநெறியின் முதன்மை நோக்கமாகும்.
இப் பாடநெறியில் கடற்படையின் கொமாண்டர் கே.இ. புத்திக (1ம் இடம்), இலங்கை இராணுவ சேவைப் படையணியின் கெப்டன் டபிள்யூ.ஜி.டி. தத்சரா (2வது இடம்) மற்றும் கடற்படையின் லெப்டினன் கொமாண்டர் எச்.எச்.ஆர். பிரபாத் 3வது இடம்.