12th November 2024 17:42:10 Hours
மனித உரிமைகள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்டம் தொடர்பான இலக்கம் 28 (அதிகாரிகள்) பாடநெறியானது குக்குலேகங்க இலங்கை சமாதன ஒத்துழைப்பு நடவடிக்கை பயிற்சி நிலையத்தில் 2024 ஓகஸ்ட் 30 சுருக்கமான விழாவுடன் நிறைவு பெற்றது.
இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக இலங்கை இராணுவத்தின் நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சிஎஸ் முனசிங்க டப்ளியூடப்ளியூவீ ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசி பீஎஸ்சி ஐஜீ அவர்கள் கலந்து கொண்டார்.
மனித உரிமைகள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்ட பணிப்பகத்தினரால் ஏற்பாடு செய்த இந்த பாடநெறியில் 18 இராணுவ அதிகாரிகள் , ஒரு கடற்படை அதிகாரி, ஒரு விமானப்படை அதிகாரி ஆகியோரின் பங்கேற்புடன் 07 ஒக்டோபர் 2024 அன்று ஆரம்பமானது.
பாடத்திட்டத்தின் சிறந்த சாதனையாளர்களாக இலங்கை பீரங்கிப் படையணியின் மேஜர் பிஜீஜீஎஸ்ஆர் படவல பீஎஸ்சீ அவர்கள் முதலாம் இடத்தையும், இலங்கை கவச வாகன படையணியின் மேஜர் டிஎம்யூடி திஸாநாயக்க 2 ஆம் இடத்தையும், இலங்கை விமானப்படையின் விங் கொமாண்டர் டபிள்யூஏஏஐ வித்தான 3வது இடத்தையும் பெற்றுகொண்டனர்.