19th September 2024 18:42:29 Hours
2024 செப்டெம்பர் 10 ம் திகதி , கம்போடியாவில் நடைபெற்ற எஎப்சீ ஆசியக் கிண்ண 2027 தகுதிச் சுற்றுப் போட்டியின் இறுதிச் சுற்றில் இலங்கை தேசிய காற்பந்து அணி ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியது. அந்த அணி, கம்போடியாவிற்கு எதிரான இரண்டாம் சுற்று ஆட்டத்தில் 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று தனக்கான இடத்தைப் பிடித்தது.
இந்த வெற்றியானது இலங்கையின் காற்பந்தாட்ட வரலாற்றில் குறிப்பிடத்தக்க சாதனைகளில் ஒன்றாக அமைவதுடன், சவூதி அரேபியாவில் நடைபெறவுள்ள எஎப்சீ ஆசியக் கிண்ணம் 2027 இல் அவர்கள் பங்குபற்றுவதற்கு வழி வகுத்துள்ளது என்பது குறிப்பிடதக்கதாகும்.
மேஜர் ஜெனரல் கேஏயூ கொடித்துவக்கு ஆர்எஸ்பீ யூஏஸ்பீ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் பின்வரும் இராணுவ வீரர்கள் இந்த சாதனையில் முக்கிய பங்கு வகித்தனர்.
•கஜபா படையணியின் காலாட் சிப்பாய் எம்ஜேஆர் முகம்மது
•கெமுனு ஹேவா படையணியின் லான்ஸ் கோப்ரல் ஏ.டபிள்யூ.எஸ். மதுஷன் (உளவியல் ஆலோசகர்)