07th May 2024 18:39:52 Hours
7 வது (தொ) இலங்கை கவச வாகனப் படையணியினால் ஏற்பாடு செய்யப்பட்ட இலங்கை கவச வாகனப் படையணிகளுக்கிடையிலான எல்லே போட்டி – 2024, கெக்கிராவ திப்பட்டுவெவ வித்தியார்த்த கல்லூரியில் 2024 ஏப்ரல் 24 மற்றும் 25 ஆம் திகதிகளில் நடைபெற்ற இறுதிப்போட்டியுடன் நிறைவடைந்தது. நடைபெற்ற இறுதிப் போட்டியில் 3 வது இலங்கை கவச வாகனப் படையணியைச் சேர்ந்த வீரர்கள் வெற்றி பெற்றனர்.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக இலங்கை கவச வாகனப் படையணி பயிற்சி நிலையத்தின் தளபதி கேணல் ஏ.எச்.ஆர் ஹசந்த ஆர்எஸ்பீ பீஎஸ்சீ அவர்கள் கலந்து கொண்டார்.
மேலும், 5 வது உளவுத்துறை படையணி இரண்டாம் இடத்தைப் பெற்றுகொண்டது. 3 வது இலங்கை கவச வாகனப் படையணியின் எம்.எஸ். லக்ஷித அவர்கள் போட்டியின் சிறந்த எல்லே வீரராக தெரிவு செய்யப்பட்டார்.